ரூ.99 க்கு விமான பயணம் என ஏர்ஏசியா சலுகை அறிவிப்பு

Default Image

ஏர்ஏசியா : 2018 மே 7 முதல் 2019 ஜனவரி 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பயணம் செபவர்களுக்கு ஏர்ஏசியா நிறுவனம் கட்டண சலுகைகளை வழங்குகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 12ம் தேதி துவங்கி இந்த மாதம் 19ம் தேதி வரை புக்கிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்களை airasia.com மற்றும் ஏர் ஏசியா மொபைல் ஆப்ஸ் மூலம்மன்பதிவு செய்யலாம்.

இந்த சலுகையின்படி  உள்ளூர் விமான பயணத்தில்  பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், ராஞ்சி, புவனேஸ்வர், கொல்கத்தா, புதுடெல்லி, கோவா உள்ளிட்ட இடங்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை கட்டணமாக ருபாய்.99க்கு பயணிக்கலாம் எனவும். இதேபோல் ரூ.444 என்கிற கட்டணத்தில் கோலாலம்பூருக்கு திருச்சி, கொச்சி, புவனேஸ்வர், டெல்லி, ஜெய்ப்பூருக்கும் பாலிக்கு மும்பை, கொல்கத்தாவில் இருந்தும், பாங்காக்கிற்கு ஜெய்ப்பூர், கொல்கத்தா, கொச்சி சென்னை மற்றும் பெங்களூருக்கும் பயணிக்கலாம்என ஏர்ஏசியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அமர் அப்ரோல் கூறியுள்ளார்.

இவ்வாறு ஏர்ஏசியா நிறுவன அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்