ரூ.9000 கோடி கடன் மோசடியுடன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா …!கடன் கொடுத்தது யார்…!உதவியது யார் …!தொடங்கிய மர்மம் …!
விஜய் மல்லையா வெளிநாடு செல்ல உதவி செய்தது யார் ?என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது.
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, கடனை திரும்பச் செலுத்த தாம் தயாராக இருந்த போதும் வங்கிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது கடன் தீர்வு விண்ணப்பத்திற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும் நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் என்று விஜய் மல்லையா பரபரப்பு தகவல் தெரிவித்தார்.
இதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், 2014 ஆண்டு முதல் தற்போது வரை என்னை சந்திக்க விஜய் மல்லையாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறினார்.
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.காரணம் என்னவென்றால் கடன் மோசடியில் சிக்கிய விஜய் மல்லையாவிற்கு எப்படி உதவி செய்வது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக எதிர்க்கட்சியினர் சரமாரியாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மீதும் மத்திய அரசு மீதும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் விஜய் மல்லையா கடன் மோசடியில் சிக்கி வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார் என்று அனைவரும் அறிந்ததே.மேலும் இவருக்கு கடன் கொடுத்தது யார் என்றும் அவருக்கு யார் உதவி செய்தார் ?மேலும் சிபிஐ கண்காணிப்பில் இருந்து எப்படி வெளிநாட்டிற்கு தப்பி சென்றார் ?என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்து வருகின்றது.என்ன நடந்தது என்று இனி வரும்காலங்களில் தான் வெளியாகும் என்று தெரிகிறது…