ரூ.8000கோடி கடன் நேபாள நீர்மின் திட்டத்திற்கு வழங்குகிறது பாரத ஸ்டேட் வங்கி…!
பாரத ஸ்டேட் வங்கி நேபாளத்தில் நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் இந்திய அரசு நிறுவனத்துக்குஎட்டாயிரம் கோடி ரூபாய் கடன்வழங்க உள்ளது. நேபாளத்தில் “அருண்-3” நீர்மின் திட்டத்தின் மூலம் தொள்ளாயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் மின்துறையின் கீழ் இயங்கும் சிம்லா ஜல் விகாஸ் நிகம் நிறுவனம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. திட்டத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடம் எட்டாயிரம் கோடி ரூபாய் கடன்பெறுவதற்கு அந்த நிறுவனம் உடன்படிக்கை செய்ய உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.