ரூ.6.79 லட்சம் கோடியாக டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு உயர்வு!
6லட்சத்து 79ஆயிரம் கோடி ரூபாயாக,டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு உயர்ந்துள்ளது.
டிசிஎஸ் எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 4 விழுக்காடு அதிகரித்து மூவாயிரத்து 545ரூபாயாக இருந்தது.
இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு 6லட்சத்து 79ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த அளவு சந்தை முதல் மதிப்பை எட்டியுள்ள முதல் நிறுவனமாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.