ரூ.12,500 கோடி மதிப்புள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை!
வங்கிகடன் கடன் மோசடியில் சிக்கி வெளிநாட்டிலுள்ள தொழிலதிபர் விஜய்மல்லையாவின் ரூ.12,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை கைப்பற்ற அமலாக்கத்துறை நடவடிக்கையை தொடங்கியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பொருளாதார குற்றவியல் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து அதன் மூலம் கடனை திருப்பும் விதமாக சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி முதல் முறையாக விஜய்மல்லையாவால் நிர்வகிக்கப்படும் நேரடி ,மறைமுக சொத்து ரூ.12,500 கோடி பறிமுதல் செய்வது குறித்து அமலாக்கத்துறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.