ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுடன் ஆரம்பம்
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.
பெடரல் ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் ஆரம்ப வர்த்தகத்தில் ரூ.81.55 ஆக குறைந்து டாலரின் மதிப்பு வலுப்பெற்றது.
முந்தைய நாள் முடிவில் நாணயம் ரூ.81.26 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.