ரிசர்வ் வங்கி அதிரடி …!பிட்காயின் சேவைக்கு தடை…!
ரிசர்வ் வங்கி பிட்காயின் எனப்படும் மெய்நிகர் நாணயப் பரிமாற்ற சேவையை எந்த வங்கிகளும் அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக 2018 – 2019 நிதியாண்டுக்கான கொள்கை அறிக்கையில் அறிவுறுத்தி உள்ள ரிசர்வ் வங்கி, தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உட்பட யாருக்கும் பிட்காயின் பரிவர்த்தனை சேவையை வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே பிட்காயின் பரிவர்த்தனை தொடர்புகள் இருப்பின், அவற்றை மூன்று மாதங்களுக்குள் துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிட்காயின் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.