மே 30-31ல் 5 சதவிதம் ஊதிய உயர்வு வழங்கக் கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
நாளை முதல் 2 நாட்களுக்கு நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால், ஏ.டி.எம். உள்பட பல்வேறு வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு கோரி, வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என கூறியதால், மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர். அதன்படி, நாளை எஸ்.பி.ஐ. இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா உள்பட பல்வேறு பொதுத்துறை வங்கியின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் வங்கிப்பணிகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.