முடிவுக்கு வந்தது சீனா-அமெரிக்கா இடையேயான போர்!போரை கைவிட சீனா-அமெரிக்கா ஒப்புதல் !
இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரி அதிகரித்து அவர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியையும் உயர்த்தப்போவதாக மிரட்டினார்.
டிரம்ப்பின் இந்த திடீர் வரி உயர்வுக்கு சீனா அதிருப்தி தெரிவித்தது. இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்னதாக, அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமையை திருடி போலியாக பொருட்கள் தயாரிப்பதற்கு சீனா உதவி செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதன் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை உயர்த்துவது குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் மூலம் 30 பில்லியன் முதல் 60 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சீனாவுக்கு இழப்பை ஏற்படுத்தலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பன்றி இறைச்சி, ஆப்பிள் மற்றும் உலோகப்பொருட்களுக்கு 15 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை வரியை கூட்ட சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வணிக யுத்தத்திற்கு அமெரிக்கா எங்களை தள்ளி விடக்கூடாது என சீனா குற்றம் சாட்டியது.
தற்போது வர்த்தக போரை கைவிட சீனா-அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. சீன துணை பிரதமர் லியூ ஹி அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 128 பொருட்களுக்கு சீனா 25% வரி விதித்திருந்தது கூடுதல் வரி விதிப்பு காரணமாக சீனா-அமெரிக்கா உறவில் பிரச்னை நிலவி வந்த சூழலில் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.