முடிவுக்கு வந்தது இரண்டு நாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தக இழப்பு!
வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய நடைபெற்ற நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.இன்று முதல் வழக்கம் போல் வங்கிகள் இயங்குகின்றன. இந்த இரண்டு நாள் போராட்டமும் மக்களுக்கு பல்வேறு இன்னல்களையும், 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தக இழப்பையும் ஏற்படுத்திய போதும் போராட்டம் மிகப்பெரிய வெற்றி என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
21 பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் வங்கிப் பணிகள் முடங்கியதுடன் ஏடிஎம்களும் வறண்டு விட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.