மாநில அரசுகளின் வருவாய் 2018-19ம் ஆண்டில் அதிகரிக்க வாய்ப்பு!
மாநில அரசுகளின் வருவாய் 2018-19ம் ஆண்டில் அதிகரிக்கும் என ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மாநில அரசுகளின் வருவாய் எந்த அளவில் இருக்கும் என்பது தொடர்பாக எஸ்பிஐ ரிசர்ச் அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2017-18ம் ஆண்டில் மாநிலங்களின் வருவாய் 18 ஆயிரத்து 698 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் அதாவது 2018-19ம் ஆண்டில் மாநிலங்களின் வருவாய் 37 ஆயிரத்து 426 கோடி ரூபாயாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி வருவாய் காரணமாக மாநில அரசுகளின் நிதி அதிகரிக்கும் என அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு பின்னர் 16 மாநிலங்களில் வரிவருவாய் 14 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைந்த அளவு ஜிஎஸ்டி வரிவருவாயை பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.