மத்திய அரசு தீவிர ஆலோசனை! டீசல்,பெட்ரோல் மீதான கலால் வரியை குறைப்பது குறித்து!
மத்திய அரசு,பெட்ரோல், டீசல் விலை முன் எப்போது இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதை அடுத்து கலால் வரியை குறைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 29 காசுகளாகவும், டீசல் விலை 69 ரூபாய் 37 காசுகளாகவும் உள்ளது.
கடந்த 55 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதை அடுத்து எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளுடன் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகத்திற்கு பெட்ரோலியத்துறை அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது.
நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19 ரூபாய் 48 காசுகளும், ஒரு லிட்டர் டீசலுக்கு 15 ரூபாய் 33 காசுகளும் கலால் வரியாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.