மக்களுக்கு இனிப்பான செய்தி …!பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!நாளை முதல் அமலுக்கு வருகிறது…!அதிரடி அறிவிப்பு …!
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.
அதேபோல் தமிழகத்தில் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.அதேபோல் மற்ற மாநிலங்களிலும் ஒரு சில எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இன்றைய (செப்டம்பர் 10)பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.91 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.98-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.