மக்களுக்கு இனிப்பான செய்தி! 16 நாட்களாக ஏறுமுகமாக இருந்த பெட்ரோல், டீசல் விலை 63 காசுகள் குறைந்தது!
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை, கடந்த 16 நாட்களாக ஏறுமுகமாக இருந்த நிலையில் இன்று காலை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு வந்தது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசலின் விலை 3 ரூபாய் 60 காசுகள் வரை அதிகரித்ததால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், சென்னையில் இன்று காலை பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 60 காசுகள் குறைந்து. 72 ரூபாய் 58 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 5 டாலர் வரை வீழ்ச்சியடைந்ததே, இந்த விலை குறைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.