முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்த போது, ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இன்று வரை டெல்லி சிபிஐ நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், இன்று ப.சிதம்பரம் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜூலை 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.