போலி ரூபாய் நோட்டுகள் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏடிஎம் ஒன்றில் வந்ததால் பரபரப்பு!

ஏடிஎம் ஒன்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் போலி ரூபாய் நோட்டுகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தின் பரேலி நகரின் ஒரு அங்கமான சுபாஷ் நகரில் உள்ள யுனைடெட் வங்கி ஏடிமில் அசோக் குமார் பட்னாயக் என்பவர் பணம் எடுக்கச் சென்றார்.
4500 ரூபாயை அவர் எடுத்த போது இரண்டு போலி 500 ரூபாய் நோட்டுகளும் அதில் கலந்திருந்தன. அவருக்கு முன்பு பணம் எடுத்த பிரவீண் உத்தம் என்பவருக்கும் இதே அனுபவம் கிடைத்துள்ளது. அவர்கள் எடுத்த பணத்துடன் சில்ரன் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரிட்ட போலி 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசாரும், வங்கி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024