பொதுத்துறை பங்குகள் விற்பனை வரும் 28-ம் தேதி தொடக்கம்…!!
பொதுத்துறை பங்கு விற்பனை வரும் 28-ம் தேதி தொடங்கப்படுவதாக மும்பை பங்குச்சந்தை தெரிவித்துள்ளது.
சிறிய முதலீட்டாளர்கள் பொதுத்துறை இ.டி.எப் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஏற்ப, பொதுத்துறை இ.டிஎப் திட்டத்தை, கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதில், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட 22 நிறுவன பங்குகள் உள்ளன. அடுத்த வாரம் மத்திய அரசு 4-வது முறையாக சி.பி.எஸ்.இ., இ.டி.எப் பங்குகளை வெளியிட இருக்கிறது.இதன் மூலம், 14 ஆயிரம் கோடி நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு விற்பனை வரும் 28-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என மும்பை பங்குச்சந்தை தெரிவித்துள்ளது.
dinasuvadu.com