பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் 3000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் கைது!
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் உள்ளிட்டோர் 3000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அந்த வங்கி அதிகாரிகள், டிஎஸ்கே நிறுவனத்திற்கு முறைகேடாக கடன் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஏற்கனவே அந்த நிறுவனத்தின் உரிமையாளர் டிஎஸ் குல்கர்னி, அவரது மனைவி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.
முதலீட்டாளர்கள் 4 ஆயிரம் பேரிடம் 1150 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றியதுடன், வங்கியில் இருந்து பெற்ற 2900 கோடி ரூபாய் கடனை வேறு முதலீட்டுக்கு பயன்படுத்திய புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியின் தலைவர் ரவீந்திர மராத்தே, நிர்வாக இயக்குனர் ராஜேந்திர குப்தா, அகமதாபாத் மண்டல மேலாளர் நித்யானந் தேஷ்பாண்டே உள்ளிட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.