பெட்ரோல் , டீசல் விலையில் மாற்றம் இல்லை …!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே அன்றாடம் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி தினந்தோறும் காலை 6 மணிக்கு பெட்ரோல் நிலையங்களில் புதிய விலை அமல்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசின் கையில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் கைக்கு விலை நிர்ணயம் சென்ற தொடக்கத்தில் பெட்ரோல்-டீசல் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. இதனால் வரலாறு காணாத வகையில் பெட்ரோல்-டீசல் விலையில் உயர்வு காணப்பட்டது. சென்னையில் கடந்த 4-ந்தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33-க்கும், டீசல் ரூ.79.89-க்கும் விற்பனையாகி வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்தநிலையில் பெட்ரோல்-டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் ஒருமித்த குரல் எழுந்தது.
இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு தலா 2 ரூபாய் 50 காசு குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. 5-ந்தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.70, டீசல் ரூ.77.11 என விலை குறைந்து விற்பனை ஆனது.மத்திய அரசின் நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் செல்ல தொடங்கியது.
இந்த நிலையில், இன்று (அக்டோபர் 17) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே இன்றும் தொடருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும், உள்ளன.
DINASUVADU