பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வாய்ப்பே இல்லை!மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி , பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க வேண்டுமென முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இது சாத்தியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் வரிகளை நேர்மையாக செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தினால் பெட்ரோல், டீசல் மீதாக வரிகளை முக்கிய வருவாய் ஆதாரமாக அரசு சார்ந்திருக்க வேண்டிய நிலை மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் வரிகள் மூலம் உள்நாட்டு உற்பத்தி விகிதம் 1.5 உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அருண் ஜெட்லி, இதில் 0.72 சதவிகிதம் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரி பங்களிப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரத்தின் கருத்து குறித்து மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ள அருண் ஜெட்லி, பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியை லிட்டருக்கு 25 ரூபாய் குறைத்தால், நாடு மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கும் என்று குறிப்பிட்டார்.
ப.சிதம்பரம் கூறும் யோசனை, அரசின் நிதி நிலையை பொறியில் சிக்க வைப்பது என்று விமர்சனம் செய்துள்ள அருண் ஜெட்லி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏன் அதனை நடைமுறைப் படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.