பெட்ரோல்,டீசல் அதிரடி விலை குறைப்பு…!முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு …!
மேற்கு வங்கத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது .
இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு அளித்த விளக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது.
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு வங்கத்தில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.1 குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் .இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.