புதுச்சேரி சட்டப்பேரவை:விவசாயிகளின் கடனுக்கு 4% தள்ளுபடி!முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சியினர் புகார் செய்தனர். கடும் அமளிக்களுக்கிடையே முதல்வர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. 2018-19 ஆம் ஆண்டிற்கு திட்டம் மற்றும் திட்டமில்லா செலவினங்களுக்கு ரூ.7,530 கோடி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் கூட்டுறவு வங்கியில் கடன்பெற்ற விவசாயிகள் முறையாக கடனை செலுத்தும்போது அரசு 4% தள்ளுபடி செய்யும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.