பணமதிப்பிழப்புக்கு பிறகு உற்பத்தி துறையில் வேகமான வளர்ச்சி
உற்பத்தி துறையின் வளர்ச்சியானது, நவம்பர் மாதம் அதிகரித்து காணபடுகிறது. கடந்தாண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் தற்போது வளர்ச்சி வேகமாக உள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் உற்பத்தி துறையில் தேக்கம் இருந்தது. இருப்பினும் புதிய ஒப்பந்தங்கள் காரணமாக உற்பத்தித் துறை வேகமாக தேக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளது. தேவைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக உற்பத்தி துறையின் வளர்ச்சி தொடர்ந்து நான்கு மாதங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய பணியாளர்களை நியமிப்பது அதிகரித்துள்ளது.
நவம்பரில் நிகிகி மற்றும் ஐஹெச்எஸ் மார்கிட் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள குறியீடு 52.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பு அக்டோபர் மாதத்தில் 50.3 சதவீதமாக இருந்தது. இது தவிர ராய்ட்டர்ஸின் அனைத்து கணிப்புகளும் தொழில்துறை குறியீடு 51 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தன. இவை கடந்த 13 மாதங்களில் இது மிக வேகமான வளர்ச்சியாகும்.
கடந்த இரண்டு மாத ஒப்பந்தங்களைவிட ஏற்றுமதிக்கான கடந்த மாத ஒப்பந்தங்கள் அதிகரித்துள்ளன. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்கத்துக்கு பின்னர் இந்தியப் பொருளாதாரமானது வளர்ச்சி பாதைக்கு திரும்பியியுள்ளது என ஐஹெச்எஸ் மார்கிட் நிறுவனத்தின் பொருளாதார அறிஞர் ஆஷானா தோதியா கூறியுள்ளார்.