பணத்தட்டுப்பாட்டை போக்க புதிய வழி!இனி இப்படி பணம் எடுத்தால் கட்டணம் கிடையாது !

Default Image

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ரஜ்னிஷ் குமார் ,நாடு முழுவதும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாடு, இன்றைக்குள் முழுமையாக சீரடையும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில் பீகார், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட திடீர் ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாட்டை நீக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

குறிப்பாக, பணப்பற்றாக்குறைக்கு ஏற்ப பகுதிகளுக்கு அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைத்திருப்பதாகவும், தற்போது நாடு முழுவதும் 86 சதவிகித ஏடிஎம்-கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் ரஜ்னிஷ் குமார் குறிப்பிட்டார். இன்று இரவுக்குள் நாடு முழுவதும் நிலைமை சீரடைந்து விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே SBI தலைமை செயல் அதிகாரியான நீரஜ் வியாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள தகவலில், Swipe Machine-கள் மூலம் கட்டணமின்றி பணம் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி, முதல் மற்றும் 2–வது தர நகரங்களில் சில்லரை விற்பனை நிறுவனங்களில் உள்ள Swipe Machine-களில் SBI மற்றும் பிற வங்கிகளின் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தினசரி ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சிறிய நகரங்களில் உள்ள Swipe மெஷின்களில், எந்தவித கட்டணமும் இன்றி, 2 ஆயிரம் ரூபாயும் எடுத்துக் கொள்ளலாம் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இதனிடையே, கரன்சி தட்டுப்பாட்டைப் போக்க, 500 மற்றும், 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி, முழுவீச்சில் நடப்பதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக்யூரிட்டி பிரின்டிங் மற்றும் மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான 4 அச்சகங்களில் புதிய 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி இரவு பகலாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்