சீன அரசு அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் மிகப் பெரிய அளவில் தங்க சுரங்கப் பணிகளை தொடங்கியிருப்பது, இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் எல்லைக்கு அப்பால் lhunze பகுதியில் மிகப்பிரமாண்டமான முறையில் சீனா சுரங்கப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5800 கோடி டாலர் மதிப்பில் தங்கம், வெள்ளி போன்ற விலைஉயர்ந்த தாதுக்கள் அந்த சுரங்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுரங்கப் பணிகள் காரணமாக இமயமலையை ஒட்டிய அந்த பரப்பில் சீன மக்கள் தொகை விரைவில் அதிகரிப்பதுடன், ராணுவ நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமையும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தென் சீன கடற்பகுதியை சீனா ஆக்கிரமித்தது போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…