பகீர் தகவல்!சீனாவின் தங்க சுரங்கப் பணி அருணாச்சலப் பிரதேசத்த்தில் தொடக்கம்!

Default Image

சீன அரசு அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் மிகப் பெரிய அளவில் தங்க சுரங்கப் பணிகளை தொடங்கியிருப்பது, இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Image result for ArunachalPradesh  GoldMine

ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் எல்லைக்கு அப்பால்  lhunze பகுதியில் மிகப்பிரமாண்டமான முறையில் சீனா சுரங்கப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5800 கோடி டாலர் மதிப்பில் தங்கம், வெள்ளி போன்ற விலைஉயர்ந்த தாதுக்கள் அந்த சுரங்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுரங்கப் பணிகள் காரணமாக இமயமலையை ஒட்டிய அந்த பரப்பில் சீன மக்கள் தொகை விரைவில் அதிகரிப்பதுடன், ராணுவ நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமையும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தென் சீன கடற்பகுதியை சீனா ஆக்கிரமித்தது போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்