நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.200 உயர்வு!மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சாதாரண ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.200 உயர்த்தி ரூ. 1,750 ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சாதாரண ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.200 உயர்த்தி ரூ. 1,750 ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் முதல் தர நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.220 உயர்வு நெல், சோளத்துக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.