நீரவ் மோடி தொடங்கி வைத்த கணக்கு!குஜராத்தில் மேலும் ஒரு நிறுவனம் மோசடி…!டி.பி.ஐ.எல்.நிறுவன உரிமையாளர், இயக்குநர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு…!
வைர வியாபாரி நீரவ் மோடி வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள நிலையில் குஜராத்தில், மேலும் ஒரு மிகப்பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வதோதராவில் இயங்கும் டைமண்ட் பவர் இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற நிறுவனம், வங்கிக் கடன் மோசடி செய்தது குறித்த ரிசர்வ் வங்கியின் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
இருப்பினும், அந்த நிறுவனத்திற்கு 11 வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. இரண்டாயிரத்து 654 கோடி ரூபாய் பாக்கித் தொகையை செலுத்தவில்லை என வங்கிகள் கூட்டமைப்பு அளித்த புகாரின் பேரில், டி.பி.ஐ.எல். நிறுவனத்தின் உரிமையாளர் S.N.பட்னாகர் மற்றும் இயக்குநர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.