“நாளை 14 மணி நேரத்திற்கு பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது” – ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!
இந்திய ரிசர்வ் வங்கியானது, ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, 14 மணி நேரம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
மக்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்ப RTGS மற்றும் NEFT என்ற ரிசர்வ் வங்கி முறையைதான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.அதிலும்,RTGS மூலம் பணத்தை அனுப்பும்போது அது உடனடியாக சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கு உடனே சென்றுவிடும்.ஆனால், NEFT மூலம் பணம் அனுப்பினால், ஒரு மணி நேரம் கழித்துதான் அவர்களின் கணக்கில் பணம் ஏறும்.இக்காரணத்தினால் அதிக அளவு மக்கள் RTGSயை பயன்படுத்துகின்றனர்.
எனினும், RTGS மூலம் குறைந்தபட்சமாக ரூ. 2 லட்சம் வரையிலான பணத்தை மட்டுமே அனுப்ப இயலும்,ஆனால் NEFT மூலம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அனுப்ப முடியும்.மேலும்,NEFT மூலமாக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணியிலிருந்து இரவு 7 மணி வரை, நாள் ஒன்றுக்கு 9 கட்டங்களாக மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
இந்த நிலையில்,இந்திய ரிசர்வ் வங்கியானது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி,நாளை 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.ஏனெனில்,தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், நாளை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணப் பரிவர்த்தனை நடைபெறாது என்றும் அதே சமயம் NEFT முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.