நடப்பு நிதியாண்டின் நேரடி வரி வருவாய் 18.2% உயர்வு!
மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தின் அறிக்கையின் அடிப்படையில், டிசம்பர் மாதம் வரையிலும் நிகர நேரடி வரிவருவாய் 6 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக உள்ளது. இதே போன்று முன்கூட்டியே செலுத்தும் வரியாக 3 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வரி 10 புள்ளி 9 விழுக்காடும், தனிநபர் வருமான வரிக்கான முன்கூட்டி செலுத்தும் வரி 21.6 விழுக்காடும் உயர்ந்துள்ளது. முன்னுரிமை வரி கட்டியவர்களுக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com