தொழிலதிபர்களுக்கு ஆப்புவைத்த மத்திய அரசு!வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதபடி தடை ……
மத்திய அரசு திறன் இருந்தும் கடனை செலுத்தாத மிகப்பெரிய 91 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதபடி, தடை விதித்துள்ளது.
வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக் ஷி ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து, 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெறுவோர், வங்கிகளில் தங்களது பாஸ்போர்ட் விவரங்களைத் தெரிவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பணம் இருந்தும் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முன்வராத 91 மிகப்பெரிய தொழிலதிபர்களின் பட்டியலை கடந்த வாரம் மத்திய அரசு தயாரித்தது. தற்போது அவர்களின் பெயர்கள் நோ பிளையிங் லிஸ்ட் என்ற விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.