தொடர்ந்து 2வது நாளாக குறைந்தும் மகிழ்ச்சி இல்லா தங்கம் விலை!

Gold Price : தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது, அனாலும் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி இல்லை என்றே சொல்ல வேண்டும்.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,235ஆகவும், சவரன் தங்கம் ரூ.49,880ஆகவும் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது. ஆனால், நேற்று கிராமுக்கு ரூ.35க்கும் சவரனுக்கு ரூ.280ஆகவும் குறைந்தது. இதையடுத்து 2வது நாளாக இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,185 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னையில் (23.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.6,185க்கும் விற்பனை செய்யயப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் (22.03. 2024) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49,600-க்கும் கிராமுக்கு ரூ.6,200-க்கும், விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ. 2 குறைந்து ஒரு கிராம் ரூ.79.50 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.79,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025