சாப்ட்வேர் துறையில் முதலிடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்தியாவில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை அதன் தற்போதைய விலையுடன் பெருக்கினால் வருவதே மொத்த மூலதன சந்தை மதிப்பாகும். அதன்படி தற்போது 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் 6,53,767 கோடி ரூபாயாக அதன் சொத்து மதிப்பு உள்ளது. பாகிஸ்தான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒட்டுமொத்த நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட இது அதிகமாகும். மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4வது காலாண்டில் டிசிஎஸ் நிகர லாபம் நான்கரை சதவீதம் அதிகரித்து 6,925 கோடியாக உயர்ந்தது.
அதனைத் தொடர்ந்து அதன் பங்கு விலையும் 6 சதவீதம் வரை அதிகரித்தது. தற்போது உலக அளவில் மதிப்புமிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில் டிசிஎஸ் 97வது இடத்தில் இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…