ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பால் சுணங்கிய இந்திய பொருளாதாரம் மீண்டுவிட்டது!உலக வங்கி

Published by
Venu

இந்திய பொருளாதாரம்  பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றால் சுணங்கிய மீண்டுவிட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

கறுப்புப்பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக, கடந்த 2016ஆம் ஆண்டில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல், நாடு முழுவதும் ஒரே சீரான வரி வசூல் முறையை அமல்படுத்தும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த இரு நடவடிக்கைகளால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ஆசியாவில் தொடர்ந்து வேகமாக வளரும் நாடாக இந்தியா இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டிருந்த சுணக்கம் நீங்கி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்தும் இந்திய பொருளாதாரம் மீண்டுவிட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 3 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7 புள்ளி 5 சதவீதமாகவும் இருக்கும் என கூறியுள்ள உலகவங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால், ஆசியாவின் வளர்ச்சியும் நடப்பாண்டில் 6 புள்ளி 9 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…

16 minutes ago

என்னது கோவாவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புள்ளி விவரம்!

கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…

37 minutes ago

தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!

அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…

1 hour ago

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித் மார்டின் கப்டில்! முக்கிய பொறுப்பு கொடுக்கும் நிர்வாகம்?

நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…

2 hours ago

திருப்பதி கூட்ட நெரிசல் : மன்னிப்பு கேட்ட தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு!

திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…

2 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கடும் கண்டனம் தெரிவித்த வன்னி அரசு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…

3 hours ago