ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு அமோகமாக கிடைத்த ரூ.7.41 லட்சம் கோடி வருவாய்!
மத்திய நிதித்துறை அமைச்சகம் ,2017-2018ஆம் நிதியாண்டில், ஜிஎஸ்டி மூலம், 7 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
கடந்தாண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. மாநிலங்களுக்கு உள்ளாக விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கான, மத்திய ஜிஎஸ்டி மூலம், ஒரு லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி மூலம் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும், ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மூலம், 3 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பாதகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், செஸ் வரி மூலம், 62 ஆயிரத்து 21 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாகவும் நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், மாதந்தோறும் சராசரியாக, 89 ஆயிரத்து 885 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.