ஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு !அடுத்த கூட்டம் ஆக.4ஆம் தேதி!

Default Image

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆக.4ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு  வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

இதில் பேசிய அவர், 12%இல் இருந்து 5% ஆக வெட் கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். விவசாயம், கூட்டுறவு வங்கி, கல்வி நிறுவன சேவைகளுக்கு வரிகுறைப்பு பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று டெல்லியில் 28ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினார்

கூட்டம் முடிந்த பின் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆக.4ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.ஜிஎஸ்டி கவுன்சில் குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் மீதான ஜிஎஸ்டியை 28%இல் இருந்து 18%ஆக குறைத்தது .மேலும் ஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு அளித்தது.

ரூ.1,000 வரை மதிப்புள்ள ஷுக்களுக்கு 5%ஆக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.  முன்பு ரு.500 வரை மதிப்புள்ள ஷூக்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்