செக்புக்குகளை தடை செய்யும் எண்ணம் மத்தியஅரசுக்கு இல்லை
செக் புக்குகளை தடை மத்திய அரசு செய்ய போவதாக இரண்டு நாள் முன்னதாக பல ஊடகங்களிலிருந்து செய்திகள் வெளியாகின. இதனை மறுத்து நேற்று இரவு நிதியமைச்சகம் தனது சமூகவலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளது.
அனைத்து ஊடகங்களும் மத்திய அரசு செக் புக் விரைவில் தடை செய்யபோவதாக அறிவித்திருந்தன. ஆனால் மத்திய அரசு, செக் புக்கை தடை செய்யும் எண்ணம் இல்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான ஏடிஎம்-டெபிட் கார்டுகளின் மூலம் 95% ரொக்க பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்துவதாகவும். 5% பேர் மட்டுமே மின்னணு பரிவர்த்தனைக்காக பயன்படுத்துகின்றனர். ரொக்க பணபரிவர்த்தனைக்கு தடை ஏற்பட்டபோது அவர்களுக்கு பெரிதும் உதவுவது இந்த செக் புக் தான். இதனால் செக் மூலமாக பணரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு இப்போது நல்ல செய்தி வந்துள்ளது.