சீனா திடீர் முடிவு!இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு வரி குறைக்க முடிவு!
சீனா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 8 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி சீனா எடுத்துள்ள முடிவில் ஏசியா பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Asia-Pacific Trade Agreement) அடிப்படையில் எடுத்துள்ளது. இதன் படி இந்தியா, வங்கதேசம், லாவோஸ், தென் கொரியா, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ரசாயனம், மருத்துவம், வேளாண், துணிகள், எஃகு, மற்றும் அலுமினியம் சார்ந்த 8 ஆயிரத்து 549 பொருட்களுக்கு வரி விகிதம் குறைக்கப்படவுள்ளதுடன், வரி விலக்கும் அளிக்க முடிவு செய்துள்ளதாக சீனா நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரி குறைப்பானது ஜூலை ஒன்று முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.