சரிந்தது..! மீண்டும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு…!

Default Image
இன்று காலை வர்த்தகத்தின்போது அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 70 ரூபாய்82காசுகள் அளவுக்கு சரிந்தது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவைச் தொடர்ந்து சந்தித்து வருகிறது. துருக்கி நாணய மதிப்பு சரிவு உள்ளிட்ட சர்வதேச காரணிகளின் தாக்கம் காரணமாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாக வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
2018ஆம் ஆண்டில் இதுவரை ரூபாயின் மதிப்பு சுமார்10 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பதாகவும் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மாத இறுதி என்பதால், இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்ததால், அதற்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியிலும் ரூபாய் மதிப்பின் சரிவு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி, அரசு மற்றும் நுகர்வோர் இருதரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்