தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்தும் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தும் வருகின்றது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலையானது இன்றும் உயர்ந்துள்ளது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்துள்ளது.இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 82.62 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசலின் விலையும் 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 75.61 ஆக விற்பனை ஆகிறது.
அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று மீண்டும் சரிவு ஏற்பட்டு 1 டாலருக்கு நிகரான மதிப்பு 72.08 ரூபாய் ஆகியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும். கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவாகியுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்தும் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தும் வருகிறது.இந்நிலையில் இந்த இரண்டும் கடும் போட்டியில் சென்று கொண்டிருக்கிறது.குறிப்பாக சதத்தை அடிப்பது பெட்ரோலா?இல்லை இந்திய ரூபாயின் மதிப்பா?என்ற கேள்வி சாமானிய மக்களிடையே ஏற்படுள்ளது.இந்த இரண்டில் ஏதாவது ஓன்று சதத்தை தொட்டாலும் அது சாதாரண மக்களைத்தான் அதிகமாக பாதிக்கும்.இதனால் பொதுமக்கள் அனைவரும் விழி பிதுங்கியே இருந்து வருகின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…