கோதுமை:இறக்குமதி மீதான சுங்கவரி 20இல் இருந்து 30 சதவிதமாக ஆக உயர்வு..!!
கோதுமை இறக்குமதிக்கான சுங்கவரியை 20விழுக்காட்டில் இருந்து 30விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
உற்பத்தி மற்றும் சுங்கவரிக்கான மத்திய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கோதுமை இறக்குமதிக்கான சுங்கவரி 20விழுக்காட்டில் இருந்து 30விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
நடப்பாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோதுமை விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியால் கோதுமை விலை வீழ்ச்சியடையக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கவரியை அரசு உயர்த்தாவிட்டால் வெளிச்சந்தையில் கோதுமை விலை வீழ்ச்சியடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது.