கேரளா வெள்ள நிவாரண நிதி:ஐக்கிய அரபு அமீரக அரசு ரூ.700 கோடி,இந்திய அரசு ரூ.600 கோடி…!இந்தியாவை மிஞ்சிய ஐக்கிய அரபு அமீரகம் …!
வெள்ளத்தால் பாதித்த கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு ரூ.700 கோடி நிதியுதவி வழங்குகிறது என முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அம்மாநில நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது.
ஆனால் இந்திய அரசாங்கத்தை பொருத்த வரையில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.600 கோடி மட்டுமே நிதி அளித்துள்ளது.முதல் கட்டமாக கேரள அரசு கேட்ட நிது ரூ.2000 கோடி ஆகும்.ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியாக கேரளாவிற்கு வழங்கியுள்ளது.இந்திய அரசாங்கத்தை காட்டிலும் ஐக்கிய அமீரக அரசு ரூ.100 கோடி நிதி அதிகமாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU