கேரளாவிற்கு ஹோண்டா நிறுவனம் மற்றும் சாம்சங் நிறுவனம் நிதியுதவி…!
கேரளாவிற்கு ஹோண்டா நிறுவனம் மற்றும் சாம்சங் நிறுவனம் நிதியுதவி செய்துள்ளது
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது.
இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் ரூ.3 கோடி கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியுதவி செய்துள்ளது. அதேபோல், சாம்சங் நிறுவனம் ரூ.1.5 கோடியும் கேரளாவுக்கு நிதியுதவி செய்துள்ளது.
DINASUVADU