வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு வெளிநாடுகளின் நிதியுதவியை பெற இந்திய அரசு மறுத்துவிட்டதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவிற்கு 2,600 கோடி வேண்டும் என இழப்பீட்டு தொகை மத்திய அரசிடம் கேட்டார் அம்மாநில முதல்வர் பினாராயி விஜயன். ஆனால் மத்திய அரசு 600 கோடி தொகை மட்டுமே அறிவித்தது. இதனிடையே ஐக்கிய அமீரக அரசர் கேரளாவுக்கு 700 கோடி நிவாரண தொகை தருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.அதேபோல் தாய்லாந்தும் கேரளத்துக்குத் தங்கள் பங்குக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது.
தாய்லாந்து கேரளாவுக்கு நிதி வழங்குவதாக தெரிவித்த நிலையில் இந்திய தூதர் ட்வீட்டரில் பக்கத்தில் தாய்லாந்துக்கு இதனை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டரில் தாய்லாந்து தூதர் இது குறித்து கூறியிருப்பதாவது, கேரளா வெள்ள நிவாரணத்துக்கு வெளிநாடுகள் வழங்கும் நிதியை ஏற்க மாட்டோம் என்று இந்தியா அலுவல்பூர்வமற்ற முறையில் எங்களிடம் தெரிவித்து விட்டது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இதனால் ஐக்கிய அமீரக அரசர் கேரளாவுக்கு 700 கோடி நிவாரண தொகை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
DINASUVADU
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…