2 ஆயிரத்து 654 கோடி ரூபாய் குஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு நிறுவனம் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த டைமண்ட் பவர் இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற நிறுவனத்தை உரிமையாளர் S.N. பட்னாகர், அவரது மகன்கள், நிறுவன இயக்குநர்களான அமித் மற்றும் சுமித் ஆகியோர், நிர்வகித்து வருகின்றனர். இவர்கள், 2012-ம் ஆண்டு அதிக வருவாய் ஈட்டியதாகக் கணக்குக் காண்பித்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம் கடன் பெற்றிருந்தனர். அந்நிறுவனம் ஏற்கெனவே வங்கிக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் தன்மையை மதிப்பிடும் ECGC-யின் எச்சரிக்கைப் பட்டியலிலும் அந்த வைர நிறுவனம் இடம்பிடித்துள்ளது. இருப்பினும், அவற்றைக் கருத்தில் கொள்ளாமலும், கடன் பெறுவதற்கான மதிப்பீட்டைக் குறைக்காமலும் 11 வங்கிகள் அவர்களுக்கு கடன் வழங்கியுள்ளன.
2016-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள 2 ஆயிரத்து 654 கோடி ரூபாய் கடனைத்திருப்பிச் செலுத்தவில்லை என வங்கிகள் கூட்டமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் டி.பி.ஐ.எல்., நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் இயக்குநர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஏற்கெனவே குஜராத்தில் வைர வியாபாரி நீரவ் மோடி வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த நிலையில், தற்போது மேலும் ஒரு மிகப்பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…