கிரிப்டோ கரன்சி 3.2 கோடி டாலர் அளவில் திருட்டு! இணையதளத்தை ஊடுருவி ஹேக்கர்கள் கைவரிசை
3 கோடியே 20 லட்சம் டாலர் அளவுக்கு கிரிப்டோ கரன்சி திருட்டால் தென்கொரிய கிரிப்டோ கரன்சி சந்தையான பிட்தம்ப் (Bithumb) இழப்பை சந்தித்துள்ளது.
பிட்தம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஒருவாரத்தில் பல்வேறு கிரிப்டோ கரன்சிகளை ஊடுருவி ஹேக்கர்கள் 3 ஆயிரத்து 500 கோடி தென்கொரிய வான் (won) மதிப்பிலான பணத்தை திருடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் 3 கோடியே 20 லட்சம் டாலர்களாகும். இதனால் பரிவர்த்தனைகளை நிறுத்திவைத்திருப்பதாக கூறியுள்ள பிட்தம்ப் எனினும் வாடிக்கையாளர்கள் விவரங்கள் இணையதளத்துடன் தொடர்பில் இல்லாத கணினி அமைப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.