கணவன்மார்களுக்கு எச்சரிக்கை!இனி மனைவி ஏடிஎம் அட்டையை பயன்படுத்த கூடாது!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வங்கி
நுகர்வோர் நீதிமன்றத்தில் , மனைவியின் ஏடிஎம் அட்டையை கணவர் பயன் படுத்துவதை ஏற்க முடியாது என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
பெங்களூரூவில் வசித்து வரும் வந்தனா என்ற பெண்ணின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி கடந்த 2013 ஆம் ஆண்டு அவரது கணவர் 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் பணம் வராததுடன் பணம் வழங்கப்பட்டுவிட்டதாக ரசீது மட்டும் வந்துள்ளது.
இது குறித்து வங்கியிடம் முறையிட்ட போது, கணவராக இருந்தாலும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை மனைவி பகிர்ந்தது விதி மீறல் என்று கூறி 25 ஆயிரம் ரூபாயை திருப்பி வழங்க எஸ்.பி.ஐ மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் நுகர்வோர் நீதிமன்றம் சென்ற போதும், ரகசிய குறியீட்டு எண்ணை மனைவி தனது கணவரிடம் தெரிவித்தது விதி மீறல் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
இதனை அடுத்து எஸ்பிஐ வங்கியின் வாதத்தை ஏற்ற நுகர்வோர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. கணக்கு வைத்திருப்பவரின் அனுமதிக் கடிதமோ இன்றி ஒருவரது ஏடிஎம் அட்டையை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.