கடும் பொருளாதர சரிவை மத்திய அரசும்..!ரிசர்வ் வங்கியும் மெத்தனமாக கையாளுகிறது..!நிபுணர் குழு..!
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவை சரிகட்டும் போக்கினை ரிசர்வ் வங்கி குறைத்துக்கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு, 70 ரூபாய்க்கும் கீழே சரிந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 80 காசாக உள்ளது.இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவை சரிகட்ட இந்திய ரிசர்வ் வங்கி போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பொருளாதார நிபுணர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.துருக்கி நாட்டின் சூழலை காரணமாக காண்பித்து விட்டு, மத்திய அரசு ஒதுங்கி கொள்கிறது. வங்கியின் செயல்பாட்டிலும் இது தொடர்பான சுறுசுறுப்பு இல்லை மெத்தன போக்கை கடைபிடிப்பதாக கூறியுள்ளனர்.
DINASUVADU