ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.77…!டீசல் விலை ரூ.76.98…!நிலைகுலைந்த சமானிய மக்கள் …!
இந்தியாவிலே அதிகமாக மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.77 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலையானது இன்றும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 41 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. ரூ. 83.54 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசலின் விலையும் 47 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.76.64 ஆக விற்பனை ஆகிறது.
இதேபோல் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.77 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்படும் நகரம் என்ற வரிசையில் முதலிடத்தில் உள்ளது.அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 47 பைசாக்கள் உயர்ந்து ரூ.76.98 ஆக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்தது.