ஐதராபாத்தில் போலி வருமான வரி இணையதளத்தை நம்பி வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்து ரூ.1 லட்சத்தை இழந்த பேராசிரியர்!
போலி வருமான வரி இணையதளத்தை நம்பி ஐதராபாத்தில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த பேராசிரியர் ஒரு லட்சம் ரூபாயை இழந்துள்ளார். ஹைதராபாத் சிட்டி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தனக்கு வந்த ஒரு மெயில் மோசடி என்று அறியாமல் அதில் இருந்த லிங்க்கைத் தேர்வு செய்தது தெரியவந்துள்ளதாக ஹைதராபாத்தின் ரச்சகொண்டா ((Rachakonda)) சைபர் கிரைம் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த லிங்க் அழைத்துச் சென்ற போலி வருமான வரி இணையதளத்தில் அவர் தனது கணக்குகளை தாக்கல் செய்து இணையதளம் மூலமே 1 லட்சம் ரூபாயை வரியாக செலுத்தியது தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.